செவ்வாய், 1 ஏப்ரல், 2014

பாத அழுத்த சிகிச்சை (Foot Reflexology)



ஆட்டிசத்திற்கான
மாற்றுமுறை மருத்துவ சிகிச்சைகள்
(பாத அழுத்த சிகிச்சையும் நச்சு நீக்கமும்)
(Alternative Autism Therapies – Foot Reflexology and Detoxification)
             - Dr. ஜான் முருகசெல்வம் –


பாத அழுத்த சிகிச்சை (Foot Reflexology):

நம் உடலில் உள்ள அனைத்து நரம்புகளும் நமது பாதங்களிலும் நமது உள்ளங்கைகளிலும் முடிவடைவது நாம் அறிந்த செய்தி. சீன / இந்திய அக்குபஞ்சர் மருத்துவத்தில் பாத அழுத்த சிகிச்சைக்கு மிக முக்கிய இடம் உண்டு. இந்திய நாட்டு முனிவர்கள் தங்கள் பாதங்களில் முள் அல்லது ஆணிகளால் பொதியப்பட்ட மரக் காலணிகளை அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதனால் நோய் நொடியின்றி நீண்ட நாட்கள் வாழ்ந்தார்கள் என்பதை நாம் அறிவோம். பாதங்களில் அவை கொடுக்கும் தூண்டல்கள்தான் இதற்குக் காரணம் என்பதைச் சொல்லத் தேவையில்லை. கால் பாதங்களில் முடிவடையும் உடலின் உள் மற்றும் வெளி உறுப்புகளின் நரம்புகளைத் தூண்டிவிடுவதால் குறிப்பிட்ட அந்த உறுப்புகள் நன்கு செயல்படத் துவங்கும். 

           

         




















ஆட்டிசக் குழந்தைகளுக்கு மூளையின் சில பகுதிகள் செயல்படுவதில் சில பிரச்சினைகள் இருப்பது நாம் அறிந்ததுதான். முக்கியமாக பேச்சு, மொழி மற்றும் கருத்துப் பரிமாற்றம், உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் திறன், சமூகத் தொடர்புத் திறன், கற்றல் திறன் போன்ற பல திறன்களில் குறைபாடுகள் காணப்படுகின்றன.

ஒரு சில குழந்தைகளுக்கு சிறு இயக்க மற்றும் பேரியக்கத் திறன்களிலும் (Gross and Fine motor) குறைபாடுகள் காணப்படுகின்றன. விரல்களைச் சரியான செயல்களுக்குப் பயன்படுத்தாமை, விரல்கள் ஒருங்கிணைப்பின்மை, கால் விரல்களைத் தரையில் ஊன்றி நடத்தல், கை கால் ஒருங்கிணைப்பின்மை, உடல் பற்றிய அறிவின்மை (body image) போன்ற பல்வேறு பிரச்சினைகளும் ஆட்டிசக் குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படுவது இயல்பு.

சில குழந்தைகளுக்கு வயிற்றுப் பிரச்சினைகள் வருவது தவிர்க்க முடியாத ஒரு நிலையாக இருக்கிறது. சாப்பிடும் உணவுகள் சரியாக செரிமானமாகாமல் அஜீரணக் கோளாறுகள் ஏற்படுகிறது. மேலும் சில குழந்தைகளுக்கு பால் மற்றும் கோதுமை உணவு வகை மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவற்றிலுள்ள கெய்சின் மற்றும் குளுடன் (Gluten and Casein) புரதங்கள் சரியாக செரிமானமாகாமல் மூளைக்குச் சென்று சேர்ந்து போதை தன்மையை ஏற்படுத்திவிடுவதாகவும் மேற்கண்ட ஆய்வுகள் உறுதிபடக் கூறுகின்றன.

செரிமானக் குறைபாடு இருந்தாலே மலம் கழிப்பதிலும் பிரச்சினைகள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இரண்டு நாள்களுக்கு அல்லது மூன்று நாள்களுக்கு ஒருமுறை மலம் கழிப்பது இக்குழந்தைகளிடம் வாடிக்கையாகி விடுகிறது. ஒரு சிலரிடம் வாரம் ஒருமுறை என்பதும் கூட சாதாரணமான வழக்கமாகிவிடுகிறது. மலம் கழிக்கும் போது அவர்கள் படும் பாடு பெரும்பாடாக இருக்கும்.

தற்போதெல்லாம் உணர்வுக் கோளாறுகள் (Sensory issues) அனைத்துப் பெற்றோர்களும் அறிந்த மிக மிகச் சாதாரண விஷயம். பிசுபிசுப்பான பொருள்களைக் கையில் தொடுவதற்கு விரும்பாமை, ஆடைகள் அணிவதில் விருப்பமில்லாமை, ஈரமான தரையில் நடப்பதற்கு விரும்பாமை, மின்சாரத்தைத் தொடுவதற்கு ஆர்வம் காட்டுதல், மிகவும் நெடி வீசும் பொருள்களை முகர்ந்து பார்த்தல், கசப்பானவற்றைக் கூட கடித்துச் சுவைத்தல், படுக்கையில் குதித்தல், தரையில் நின்றுகொண்டு கொண்டு வேகமாக தட்டாமாலை சுற்றுதல் எனப் பலவிதங்களிலும் இக்குழந்தைகளின் உணர்வுக் கோளாறுகள் வெளிப்படுகின்றன.  
                           
பிறருடைய உணர்வுகளை புரிந்துகொள்ள இயலாமை, பிறரின் முக வெளிப்பாடுகளை புரிந்து கொள்ள இயலாமை, பிறரைப் பார்த்து பாவனையாகக் கற்றுக் கொள்வதில் சிரமம், தன் வயதையொத்த குழந்தைகளுடன் விளையாட விருப்பமின்மை, ஒன்றுக்கும் உதவாத ஒரு பொருளுடன் மணிக்கணக்கில் பொழுதைக் கழித்தல் என பிரச்சினைகளுக்கு மேல் பிரச்சினைகள் இக்குழந்தைகளிடம் காணப்படுவது பெற்றோர்களுக்கு ஒரு பெரிய பாரமாக மாறிவிடுகிறது.

இவற்றிற்கெல்லாம் விடிவே கிடையாதா என்று ஆங்கில மருத்துவரிடம் சென்றால், பெரும்பாலும் தூக்கம் வரவழைக்கும் (sedatives) மருந்துகளைக் கொடுத்து, இதுதான் தீர்வு என்று பெற்றோரையும் நம்பவைத்து விடுகின்றனர். பல பெற்றோர்கள் இதை ஏற்காவிட்டாலும் வேறு வழியின்றி ஆங்கில மருத்துவர் சொன்னதைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். ஆனால், ஆங்கில மருந்துகளின் பக்க விளைவுகளின் பயங்கரம் பலருக்கும் தெரிவதில்லை. 

மேற்கூறிய பல்வேறு பிரச்சினைகளுக்கும் நல்லதொரு தீர்வாக நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு மாற்றுமுறை மருத்துவம்தான் பாத அழுத்த சிகிச்சை (Foot Reflexology). ஆட்டிசம் பற்றி நன்கு தெரிந்த ஆட்டிச நிபுணர் ஒருவர் பாத அழுத்த சிகிச்சை தரும்போது மிக நல்ல விளைவுகளை நாம் எதிர்பார்க்க முடியும்.

நச்சு நீக்கம் (Detoxification):

ஆட்டிசக் குழந்தைகளின் உடலில் பல்வேறு நச்சுப்பொருட்கள் தேங்கிக் கிடப்பதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

01. மூளையில் சேர்ந்துள்ள கெய்சின் மற்றும் குளுடன் புரதங்கள்

02. காரீயம் – நரம்பு நச்சு  (Lead – Neurotoxin)

03. பாதரசம் – நச்சுத் தனிமம் (Mercury – Heavy Metal)

04.  கல்லீரல் மற்றும் சிறு நீரகத்தில் சேரும் பல்வேறு இரசாயன நச்சுகள்  

05.   உணவுப்பொருட்களில் கலந்திருக்கும் பூச்சி மருந்துகள் (Pesticides)

06.   உணவுப்பொருட்களில் உள்ள செயற்கை நிறங்கள் / வாசனைகள்

07.  உணவுப்பொருட்களில் கலக்கப்பட்டிருக்கும் செயற்கை இரசாயனங்கள் (Additives /Preservatives)

08.   ஆங்கில மருந்துகளின் நச்சுகள் 

                             

- இப்படி ஒரு பெரிய பட்டியலே தயாரிக்குமளவிற்கு ஆட்டிசக் குழந்தைகளின் உடலில் நச்சுகள் தேங்கிக் கிடக்கின்றன. இவற்றால் பல்வேறு பிரச்சினைகள் ஆட்டிசக் குழந்தைகளிடம் ஏற்படுகின்றன. எனவே ஆட்டிசக் குழந்தைகளின் உடலில் தேங்கிக் கிடக்கும் இதுபோன்ற நச்சுகளை வெளியேற்றம் செய்வது நல்ல பலனைத் தரும்.

இயற்கையான பொருள்களால் தயாரிக்கப்பட்ட நச்சு நீக்கப் பாதப் பட்டைகளைப் (Detox Foot Pads) பாதங்களில் ஒட்டுவதால் பாதங்களின் நுண்ணிய துவாரங்களின் வழியாக உடலில் சேர்ந்துள்ள நச்சுகள் வெளியேற்றப்படுகின்றன. நச்சு நீக்கப் பாதப் பட்டைகள் சீன மற்றும் ஜப்பான் மருத்துவ முறைகளில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன. கீழை நாடுகளிலும் நச்சு நீக்கப் பாதப் பட்டைகள் மாற்றுமுறை மருத்துவத்தில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நச்சு நீக்க முறையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
 
பாத அழுத்த சிகிச்சையோடு, நச்சு நீக்க பாதப் பட்டைகளைப் பயன்படுத்துவதால் ஆட்டிசக் குழந்தைகளின் நிலையை முன்னேற்ற முடியும்.

மேற்குறிப்பிட்ட இரண்டு சிகிச்சை முறைகளும் எமது “நடத்தை மற்றும் கருத்துப் பரிமாற்ற வளர்ச்சிக்கான பயிற்சிச் சாலை”-யின் (Academy for Behaviour and Communication Development) ஓர் அங்கமான குழந்தைகள் சிகிச்சை மையத்தில் (Milestones Kidz Cliniq) அளிக்கப்படுகின்றன. அதோடு எமது “காருண்யா சிறப்புக் குழந்தைகளுக்கான வீட்டுச் சேவை” (Karunya Itinerant Service for Children with Special Needs) மூலமாகவும் தேவைப்படுவோர்க்கு வீடுகளுக்கே வந்து இச்சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:

 நடத்தை மற்றும் கருத்துப் பரிமாற்ற வளர்ச்சிக்கான பயிற்சிச் சாலை

   “ஜாய்ஸ் வில்லா”, மாலையம்மாள்புரம், கம்பம் – 625516.

  Mob: +919444280044           Mail: murugaselvam@yahoo.com    

   https://www.facebook.com/ABCD.Cumbum    

2 கருத்துகள்:

  1. Great job. Thank you so much for providing such a valuable information. I am looking forward to visit your blog at daily basis. Please visit this site for your reference about your blog. Doorstep Salon Services Chennai | Woman beauty salon at home in Chennai

    பதிலளிநீக்கு
  2. The Casino Hotel - Mapyro
    Property LocationWith a stay at The Casino Hotel in Atlantic City (New 청주 출장마사지 Jersey), youll be convenient to Senator Frank S. A 10-star 논산 출장안마 hotel with all 서산 출장마사지 of the 광명 출장샵 amenities 사천 출장안마 that

    பதிலளிநீக்கு